Posts

Showing posts from September, 2023

என்ன சொல்கிறார் அறிஞர் அண்ணா? கேள்வியும் - பதிலும்

 1. இயக்கத்தைப் பற்றி தினசரி வதந்திகளை உலவவிட்டு, வம்புக்கு இழுக்கிறார்களே? நமது இயக்கம் நன்றாகத் தழைத்திருப்பது கண்டு அருவருப்பு அடைபவர் பலர் உண்டல்லவா- அவர்கள், அவர்களின் பண்புக்குத் தக்கபடி பழிசுமத்துவதும், புகார் கிளப்புவதும், வதந்திகளை உலவ விடுவதும், வம்புக்கு இழுப்பதுமாகத்தான் இருப்பர், நாம் அவைகளைப்பற்றிக் கவலைப்படக் கூடாது; நாம் கவலைப்பட வேண்டும், கோபமடைய வேண்டும் என்பதற்காகத்தானே அவர்கள் அவ்விதமெல்லாம் பேசுவதும் எழுதுவதும்! அந்த வலையில் நாம் விழலாமா? நமக்கு நிரம்ப வேலை இருக்கிறதே தம்பி! நமது சக்திக்கு மீறிய காரியத்தை அல்லவா நாம் மேற் போட்டுக் கொண்டிருக்கிறோம். உன் நினைவு முழுவதும் அதிலே செல்லவேண்டும். ஆமாம், சில்லரைகளில் சிந்தனையைச் செலவிடக் கூடாது. 2.தினசரி மீடியாக்களில், செய்தித்தாள்களில் நம்முடைய நல்ல திட்டங்கள், செயல்கள் கூட இருட்டடிப்பு செய்யப் படுகிறதே? இங்குள்ள "பத்திரிகைகள்' நமது மூலாதாரக் கொள்கையை மறுப்பன. எனவே, அந்தக் கொள்கையை இருட்டடிப்பு மூலம் சாகடிக்கலாம் என்று எண்ணுகின்றனர். இதிலிருந்து நாம் தப்ப வேண்டுமானால், ஒவ்வொரு கிளைக் கழகமம் தனிப்பட்டவர் கள...

கரை ஒதுங்கும் விநாயகர் சிலைகள்? அச்சுறுத்தலாகும் சுற்றுச் சூழல்? எங்கே அவர்கள்?!

Image
 முன் எப்போதும் இல்லாத அளவிற்கு விநாயகர் சிலைகள், ஊர்வலங்கள் அதிகரித்து இருக்கின்றன. பொதுமக்களைத் தாண்டிய சில அரசியல் இயக்கங்களின் தூண்டுதல்கள் அதிகரித்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு  சென்னையின் சில இடங்களில் உள்ள கடற்கரைகளில் கரைக்கப் பட்ட விநாயகர் சிலைகள் நேற்று கரை ஒதுங்கியது. அதோடு மட்டுமில்லாமல் கடல் நீரின் வண்ணங்களும் மாறி ரசாயனங்கள் கலந்திருந்தது. நீதி மன்றங்கள் எவ்வளவோ சொல்லியும் ரசாயனங்கள் நிறைய பூசப் பட்டிருக்கும் விநாயகர் சிலைகளால் நிகழ்ந்த சோகங்கள் இது. பக்தியை யாரும் வேண்டாம் என சொல்லப் போவதில்லை. ஆனால் தெருவுக்கு ஒரு விநாயகர் கோவில் இருக்கும் நம் நாட்டில் இத்தனை விநாயகர் சிலைகள், அதை ஒட்டிய கரைப்புகள், அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுபாடுகள் தேவைதானா? கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகளை அரசுதான் அப்புறப் படுத்திக் கொண்டிருக்கிறது. எந்த பக்தி இயக்கங்களோ அல்லது சுற்றுச் சூழல் இயக்கங்களோ இதற்காக குரல் எழுப்பவோ, உதவி செய்யவோ இல்லை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீடிரென சிலரால் கிளப்பி விடப் படும் அசாதாரண சூழல்கள், ...

ஒருதலைக் காதலால் கத்திக்குத்து! - இதுதான் காதலா??

 நேற்று சென்னையில் காதலிக்க மறுத்ததாக பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது, பெண் மருத்துவமனையில் அனுமதி என்ற நியூஸ் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. அதுவும் ஒரு தலைக் காதலாம், பெண்ணிற்கு அந்தக் காதலில் விருப்பமில்லை. பையன் மட்டுமே ஒருதலையாக அந்தப் பெண்ணை காதலித்து வந்துள்ளான். அதனை ஏற்க மறுத்ததால் இவ்வாறு செய்திருக்கிறான். இவர்கள் காதல் என்றால் என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? காதல் என்பது இருவருக்குமான விருப்பம். கட்டாயம் என்பது காதலல்ல. ஒரு பண்பட்ட சமூகம் காதலை வெளிப்படுத்த எவ்வளவு சுதந்திரம் உள்ளதோ அதே அளவு அந்தக் காதலை மறுப்பதற்கும் சுதந்திரமுள்ளது. இதனை இளைய சமுதாயம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். தன்னை காதலிக்க வற்புறுத்துகிறார் என, அந்த ஆணை அப் பெண் கத்தியால் எங்கேயாவது குத்தியது என்ற நியூஸ் வருகிறதா? பிறகு பெரும்பாலும் ஆண்கள் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும். காதல் பற்றிய பேச்சுக்கள் குடும்பத்தில் ஆரம்பித்து சமூகம் வரை பேசப் பட வேண்டும். பண்டைய தமிழ் இலக்கியங்கள் காதலை அப்படித்தான் அணுகியது. இடையில் கைபர் போலன் கணவாய் வழி வந்தவர்கள் தனது நரித்தனைத்தை சாதிய வர்ணமாக பு...

நீட் என்னும் சமூக அநீதி - இனி பூஜ்ஜியம் மார்க் எடுத்தாலே மருத்துவம் படிக்கலாம்

 நீட் என்னும் சமூக அநீதி சில வருடங்களுக்கு முன்பு நம் எல்லோருக்கும் நீட் தேர்வு திறமையானவர்களைத் தேர்ந்தெடுக்கவே கொண்டுவரப் படுகிறது என்று பிரச்சாரம் செய்து வலுக்கட்டாயமாக நம்ப வைக்கப் பட்டது. அதற்காக தென் இந்தியாவில் பல கிடுக்குப் பிடிகள் போடப் பட்டது. உதாரணமாக, தமிழ் நாட்டில் தேர்வு எழுத வேண்டியவர்களை பிற மாநிலங்களுக்கு எக்ஸாம் சென்டர் ஒதுக்குவது, பெண்களின் தாலியை கழட்டிக் கொடுத்துவிட்டுச் சென்று எழுதச் சொல்வது போன்று ஏராளமான கிடுக்குப் பிடிகள். அதே ஆண்டுகளில் ஒரே கோச்சிங் சென்டரைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் மருத்துவ சீட் பெறுவதும், முக்கியமான பாடத்தில் பெயில் ஆனவர்கள், குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் சீட் பெறுவதும், வினாத்தாள்கள் ரிலீஸ் ஆவதும் நடந்து கொண்டிருந்து. இந்தக் கொடுமைகளால்  தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இளம் மாணவர்கள், பெற்றோர்கள் தற்கொலை செய்த வண்ணம் இருந்தனர். ஆனாலும் ஓபிசி பிரிவினர் உள்ளே நுழையக் கூடாது, கிராமப் புற ஏழை எளியவர்கள் மருத்துவர் ஆகிவிடக் கூடாதென ஒரு நரிக் கூட்டம் தொடர்ந்து தனது சதி வலைகளைப் பின்னிக் கொண்டிருந்தது. அதன் ஒரு பகுதி...

விஜய் ஆண்டனி மகளின் மறைவும் மீடியாக்களின் அருவருப்பும்

 விஜய் ஆண்டனி மகளின் மறைவும் மீடியாக்களின் அருவருப்பும்  இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி அவர்களின் மூத்த மகள் மறைந்ததையொட்டி சமூக வலைத்தளங்களிலும் சரி, மீடியாவிலும் சரி இஷ்டத்துக்கு அனைவரும் எழுதியும், பேசியும் வந்தனர். ஒரு கட்டத்தில் கோவமும், அருவருப்பும் அவர்களின் மீது வரும் அளவிற்கு நடந்து கொண்டார்கள். விஜய் ஆண்டனி போலவே அவரவர்களுக்கு ஒரு குடும்பம் இருக்கும் அல்லவா, அதை அவர்கள் நினைத்துப் பார்த்தாவது பொறுப்புடன் நடந்து கொள்ளக் கூடாதா? சிலர் பணக்கார வீடு அப்படிதான் இருக்கும், யாரும் கண்டுக்க மாட்டார்கள் என்கிறார்கள். அடித்து வளர்க்கத் தெரியாதா என்கிறார்கள். பெண்களே இப்படித்தான் என்கிறார்கள். வீட்டு வேலை, காட்டு வேலை செய்து கஷ்டப்பட்டு வாழ்ந்தால் மன அழுத்தம் வராது என்கிறார்கள். சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழிச்சியில் விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சியோடு சம்மந்தப் படுத்தி தவறாக ஏதோ பேசி அவரை வம்புக்கு இழுத்த மீடியா பற்றிய செய்தியை மேற்கோள் காட்டி சிலர் கடவுள் அதற்கு தண்டனை கொடுத்து விட்டார் என்கிறார்கள். கடவுளுக்கு தனி மனிதர்களின் வன்மத்தை தீர்க்கும் வேலை தான் தரப் பட்டிர...

அறிஞர் அண்ணாவின் பொன் மொழிகள்

  பண்டைப் பெருமைகளை எடுத்துக்காட்டி எளிய வாழ்க்கையே மேலென உபதேசம் செய்து, மக்களை வறுமையிலேயே விட்டு விடுகிறார்கள். சுருக்கமாக கூற வேண்டுமானால், நாம் முன்னேற்றம் வேண்டுமென்கின்றோம் அவர் ஆதி காலத்திற்கு நம்மை அழைக்கிறார். எவ்வெவைகளை நாம் மூடத்தனமென விளக்கிக் காட்டி குப்பையில் வீசி எறிந்தோமோ, அவைகளெல்லாம் புதிய மெருகிடப்பட்டு விளையாகின்றன. இதனை நாம் தடுக்காவிடில் பலனை தமிழர் இழந்து விடுவர். #ArignarAnna #HBDAnna #ArignarAnnaQuotes  Visit  www.viyanbooks.com  for book details/purchases.

தமிழில் பெயர் வையுங்கள்

 கடந்த வாரம் எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சோசியல் மீடியா நண்பர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தேன். அப்போது பெரும்பாலானோர் கேட்டது, என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்? #தமிழில்பெயர் / #தமிழ்ப்பெயர் வையுங்கள் என்றுதான். எனக்கு இதைக் கேட்டதும் கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி தான் வந்தது. காரணம், ஒரு காலத்தில் தமிழ்ப் பற்று மிகுதியாக இருந்த போது எல்லோரும் தாமாகவே முன் வந்து அவர்களின் பெயரை மாற்றியதோடு, அவர்களின் குழந்தைகளுக்கும் தூய தமிழிலேயே பெயர் வைத்தனர். அந்தக் காலம் மீண்டும் வர ஆரம்பித்து இருக்கிறது என்று நினைக்கிறேன். அதற்கு இப்போது நடக்கும் அரசியல் சூழலும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழில் பெயர் வைப்பதோடு மட்டுமில்லாமல், திருமண மற்றும் வாழ்வியல் முறையிலும் தமிழர் நடைமுறையைப் பின்பற்ற வேண்டுவது இந்த இனத்தை உயிர்ப்பித்திருக்கும். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்ட பிறகு, நாம் மற்ற மாநிலங்களில் வாழும் பிற தேசிய இனங்களின் திருமண முறையைப் பின்பற்றுகிறோமா? இல்லையே பிறகு எப்படி தமிழர் திருமண முறை என்று வேறு இனங்களின் திருமண முறையைப் பின்பற்ற வேண்டும்? தமிழர...

வியன் புக்ஸ் சமூக நீதி இலக்கிய விருதுகள் போட்டி முடிவுகள் 2023

Image
  வியன் புக்ஸ் சமூக நீதி இலக்கிய விருதுகள் போட்டி முடிவுகள் 2023   Visit  www.viyanbooks.com  for book details/purchases.

அந்த மரத்தின் பின்னால் - ஷியாம் மரூன்

Image
✅கோவை புத்தகக் கண்காட்சி 2023 இல் நண்பர் கவிஞன் மொழியிடம் புது எழுத்தாளர்களின் புத்தகம் கொடுங்கள் என்று கேட்டு வாங்கியதில் கிடைத்தது எழுத்தாளர் ஷியாம் மரூன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு. ✅சிறு துளி சேர்ந்து கடலாவது போல...ஒரு பக்கக் கதை போல சிறு சிறு கதைகள் சுமார் 50 சேர்ந்த தொகுப்பு. எல்லா உணர்வுகளையும் கடத்திச் செல்வதில் எழுத்தாளர் வெற்றி பெற்று இருக்கிறார், நிறைய இடங்களில் அட செம என்றும் சில இடங்களில் புன்முறுவல் செய்ய வைக்கிறது. ❇️Feel good கதைகள் நிறைய இருக்கிறது, தாராளமாக இதனைப் படிக்கலாம். பதிப்பாளர் & எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள். ❇️புத்தக விமர்சனம்❇️ புத்தகம்: அந்த மரத்தின் பின்னால் எழுத்தாளர்: ஷியாம் மரூன்  வெளியீடு: ஏலே பதிப்பகம் வகை: சிறுகதை பக்கம்:112 விலை:160₹ Visit  www.viyanbooks.com  for book details/purchases.

மாயநதி - ரோஹித் ராஜேந்திரன்

Image
✳️எழுத்தாளரின் முதல் படைப்பு மாயநதி. ஆனால் எழுத்தும், வட்டார மொழியும் தேர்ந்த எழுத்தாளர் போலவே காட்டுகிறது. ✳️முதல் படைப்பிலேயே தைரியமான கருவை எடுத்துக் கொண்டு சமூகத்தை பிரதிபலித்து இருக்கிறார். அதற்காகவே பாராட்டலாம். ✳️ஆதிக்கம் எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்க்கப் பட வேண்டியது.  ✳️எவ்வளவோ சிறப்புகளை இந்த வட்டாரம் கொண்டிருந்தாலும் வடுவாக இருப்பது இந்த ஆதிக்கம் தான் அதனை காதல், பெண்கள், குடும்ப உறவுகள் மூலம் கதை சொல்லி இருக்கிறார் ரோஹித். ✳️இந்த நாவல் தன் சிறகை விரிக்கும் இடங்களில் எல்லாம் சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தும், அதுவே இதன் வெற்றியும் கூட. ✳️அனைவரும் படிக்க வேண்டிய நாவல் இது. ✳️இது போன்ற பல சமூகப் படைப்புகளை எழுத்தாளர் தர வேண்டும்! ✳️எழுத்தாளருக்கும் , பதிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்! புத்தகம்: மாயநதி வகை: குறு நாவல் எழுத்தாளர்: ரோஹித் ராஜேந்திரன்  வெளியீடு: கற்கை பதிப்பகம் பக்கம்: 108 விலை : 120₹ Visit  www.viyanbooks.com  for book details/purchases.

கடந்து போன பயணங்கள் - சி.ரா .சங்கர்

Image
என் மரியாதைக்குரிய அண்ணன்,எழுத்தாளர் டான் அசோக் அவர்கள் பயணக் கட்டுரை என்பது "முன் முடிவுகளால் நிறைந்திருக்கக் கூடாது. தமக்கு அறிமுகம் ஆனவர்களை நமக்கு அறிமுகம் செய்ய வேண்டுமென சொல்லி இருப்பார்". இளம் எழுத்தாளர் சி.ஆர்.சங்கரின் கடந்து போன பயணங்கள் என்ற பயணக் கட்டுரை அப்படிதான் எனக்கு இருந்தது. அவரின் "கடந்து போன பயணங்கள்" நான் இப்போது பயணித்தது போலிருந்தது. அதிலேயே அவர் வெற்றி பெற்றுவிட்டார். மேலும் நடந்தது பற்றி,உள்ளதை உள்ளபடி சொல்வது ஒரு கலை அதோடு சேர்த்து அந்த நிகழ்வுகளின் போது நம் எண்ணங்களில் ஏற்பட்ட பயணங்களை அப்படியே பிரதிபலிப்பதற்கு ஒருவித துணிவு வேண்டும். அந்தத் துணிவிற்கு பாராட்டுக்கள். பயணக் கட்டுரை என்றாலும், நா.முத்துக்குமார் ரசிகன் என்பதால் எதார்த்தமும்,கவிதையும் எழுத்துக்களில் வந்து விழுந்திருக்கிறது.நிறைய இடங்களில் புன்முறுவல் பூக்கச் செய்கிறது, உணர்வுகளை கடத்துகிறது. எவ்வளவு பிடித்த பயணம் என்றாலும் அது முடியும் பொழுது ஒரு வித  களைப்பு வந்துவிடும்.ஆனால் இவரின் கடந்து போன பயணம் களைப்பை ஏற்படுத்தாமல் நம்முடைய பயணத்தை நினைவூட்டுகிறது... தொடர்ந்து பல படைப்ப...