பண்டைப் பெருமைகளை எடுத்துக்காட்டி எளிய வாழ்க்கையே மேலென உபதேசம் செய்து, மக்களை வறுமையிலேயே விட்டு விடுகிறார்கள். சுருக்கமாக கூற வேண்டுமானால், நாம் முன்னேற்றம் வேண்டுமென்கின்றோம் அவர் ஆதி காலத்திற்கு நம்மை அழைக்கிறார். எவ்வெவைகளை நாம் மூடத்தனமென விளக்கிக் காட்டி குப்பையில் வீசி எறிந்தோமோ, அவைகளெல்லாம் புதிய மெருகிடப்பட்டு விளையாகின்றன. இதனை நாம் தடுக்காவிடில் பலனை தமிழர் இழந்து விடுவர். #ArignarAnna #HBDAnna #ArignarAnnaQuotes Visit www.viyanbooks.com for book details/purchases.
நேற்று சென்னையில் காதலிக்க மறுத்ததாக பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது, பெண் மருத்துவமனையில் அனுமதி என்ற நியூஸ் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. அதுவும் ஒரு தலைக் காதலாம், பெண்ணிற்கு அந்தக் காதலில் விருப்பமில்லை. பையன் மட்டுமே ஒருதலையாக அந்தப் பெண்ணை காதலித்து வந்துள்ளான். அதனை ஏற்க மறுத்ததால் இவ்வாறு செய்திருக்கிறான். இவர்கள் காதல் என்றால் என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? காதல் என்பது இருவருக்குமான விருப்பம். கட்டாயம் என்பது காதலல்ல. ஒரு பண்பட்ட சமூகம் காதலை வெளிப்படுத்த எவ்வளவு சுதந்திரம் உள்ளதோ அதே அளவு அந்தக் காதலை மறுப்பதற்கும் சுதந்திரமுள்ளது. இதனை இளைய சமுதாயம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். தன்னை காதலிக்க வற்புறுத்துகிறார் என, அந்த ஆணை அப் பெண் கத்தியால் எங்கேயாவது குத்தியது என்ற நியூஸ் வருகிறதா? பிறகு பெரும்பாலும் ஆண்கள் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும். காதல் பற்றிய பேச்சுக்கள் குடும்பத்தில் ஆரம்பித்து சமூகம் வரை பேசப் பட வேண்டும். பண்டைய தமிழ் இலக்கியங்கள் காதலை அப்படித்தான் அணுகியது. இடையில் கைபர் போலன் கணவாய் வழி வந்தவர்கள் தனது நரித்தனைத்தை சாதிய வர்ணமாக பு...
கடந்த வாரம் எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சோசியல் மீடியா நண்பர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தேன். அப்போது பெரும்பாலானோர் கேட்டது, என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்? #தமிழில்பெயர் / #தமிழ்ப்பெயர் வையுங்கள் என்றுதான். எனக்கு இதைக் கேட்டதும் கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி தான் வந்தது. காரணம், ஒரு காலத்தில் தமிழ்ப் பற்று மிகுதியாக இருந்த போது எல்லோரும் தாமாகவே முன் வந்து அவர்களின் பெயரை மாற்றியதோடு, அவர்களின் குழந்தைகளுக்கும் தூய தமிழிலேயே பெயர் வைத்தனர். அந்தக் காலம் மீண்டும் வர ஆரம்பித்து இருக்கிறது என்று நினைக்கிறேன். அதற்கு இப்போது நடக்கும் அரசியல் சூழலும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழில் பெயர் வைப்பதோடு மட்டுமில்லாமல், திருமண மற்றும் வாழ்வியல் முறையிலும் தமிழர் நடைமுறையைப் பின்பற்ற வேண்டுவது இந்த இனத்தை உயிர்ப்பித்திருக்கும். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்ட பிறகு, நாம் மற்ற மாநிலங்களில் வாழும் பிற தேசிய இனங்களின் திருமண முறையைப் பின்பற்றுகிறோமா? இல்லையே பிறகு எப்படி தமிழர் திருமண முறை என்று வேறு இனங்களின் திருமண முறையைப் பின்பற்ற வேண்டும்? தமிழர...
வாழ்த்துகள் தோழர்களே
ReplyDeleteThank you Thozhar
Delete