ஒருதலைக் காதலால் கத்திக்குத்து! - இதுதான் காதலா??
நேற்று சென்னையில் காதலிக்க மறுத்ததாக பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது, பெண் மருத்துவமனையில் அனுமதி என்ற நியூஸ் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. அதுவும் ஒரு தலைக் காதலாம், பெண்ணிற்கு அந்தக் காதலில் விருப்பமில்லை. பையன் மட்டுமே ஒருதலையாக அந்தப் பெண்ணை காதலித்து வந்துள்ளான். அதனை ஏற்க மறுத்ததால் இவ்வாறு செய்திருக்கிறான்.
இவர்கள் காதல் என்றால் என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? காதல் என்பது இருவருக்குமான விருப்பம். கட்டாயம் என்பது காதலல்ல. ஒரு பண்பட்ட சமூகம் காதலை வெளிப்படுத்த எவ்வளவு சுதந்திரம் உள்ளதோ அதே அளவு அந்தக் காதலை மறுப்பதற்கும் சுதந்திரமுள்ளது. இதனை இளைய சமுதாயம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
தன்னை காதலிக்க வற்புறுத்துகிறார் என, அந்த ஆணை அப் பெண் கத்தியால் எங்கேயாவது குத்தியது என்ற நியூஸ் வருகிறதா? பிறகு பெரும்பாலும் ஆண்கள் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும். காதல் பற்றிய பேச்சுக்கள் குடும்பத்தில் ஆரம்பித்து சமூகம் வரை பேசப் பட வேண்டும். பண்டைய தமிழ் இலக்கியங்கள் காதலை அப்படித்தான் அணுகியது. இடையில் கைபர் போலன் கணவாய் வழி வந்தவர்கள் தனது நரித்தனைத்தை சாதிய வர்ணமாக புகுத்தி காதலை ஆணவக் கொலை வரை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
காதலைக் கொண்டாடிடும் சமூகம், இனம் தான் வல்லரசு சமூகமாக வர முடியும். காதல் என்பது வெறுப்பல்ல, கட்டாயமல்ல அது சுதந்திரம். காதலுக்கான பரஸ்பர புரிதலை, சூழலை சமூகத்தில் ஜாதி, மத, இன, மொழி, பால் பாகுபாடு கடந்து ஏற்படுத்துவோம்.
Comments
Post a Comment