விஜய் ஆண்டனி மகளின் மறைவும் மீடியாக்களின் அருவருப்பும்
விஜய் ஆண்டனி மகளின் மறைவும் மீடியாக்களின் அருவருப்பும்
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி அவர்களின் மூத்த மகள் மறைந்ததையொட்டி சமூக வலைத்தளங்களிலும் சரி, மீடியாவிலும் சரி இஷ்டத்துக்கு அனைவரும் எழுதியும், பேசியும் வந்தனர். ஒரு கட்டத்தில் கோவமும், அருவருப்பும் அவர்களின் மீது வரும் அளவிற்கு நடந்து கொண்டார்கள்.
விஜய் ஆண்டனி போலவே அவரவர்களுக்கு ஒரு குடும்பம் இருக்கும் அல்லவா, அதை அவர்கள் நினைத்துப் பார்த்தாவது பொறுப்புடன் நடந்து கொள்ளக் கூடாதா? சிலர் பணக்கார வீடு அப்படிதான் இருக்கும், யாரும் கண்டுக்க மாட்டார்கள் என்கிறார்கள். அடித்து வளர்க்கத் தெரியாதா என்கிறார்கள். பெண்களே இப்படித்தான் என்கிறார்கள். வீட்டு வேலை, காட்டு வேலை செய்து கஷ்டப்பட்டு வாழ்ந்தால் மன அழுத்தம் வராது என்கிறார்கள். சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழிச்சியில் விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சியோடு சம்மந்தப் படுத்தி தவறாக ஏதோ பேசி அவரை வம்புக்கு இழுத்த மீடியா பற்றிய செய்தியை மேற்கோள் காட்டி சிலர் கடவுள் அதற்கு தண்டனை கொடுத்து விட்டார் என்கிறார்கள். கடவுளுக்கு தனி மனிதர்களின் வன்மத்தை தீர்க்கும் வேலை தான் தரப் பட்டிருக்கிறதா என்ன? இவர்களெல்லாம் தங்களை மருத்துவர்கள் போல, துப்பறியும் ஹீரோக்கள் போல, போலீஸ் போல நினைத்துக் கொண்டு கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களெல்லாம் கேவலமானவர்கள். அதிலும் அவரது மகளுக்கு அஞ்சலி செலுத்த வந்த பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் அத்துமீறி கேள்விகளை மீடியாக்கள் கேட்டன. அவர் பொறுமையுடன் சொல்கிறார், நாங்கள் வேதனையில் இருக்கிறோம் பிளீஸ் விடுங்கள் என்று. ஆனால் பின்னாலே துரத்துகிறார்கள். என்ன மாதிரியான சமூகம் இது? அவர்களுக்கு நம் கண்டனங்களை பதிவு செய்தே ஆக வேண்டும்.
திருந்துங்கள் மீடியாக்களே, இதெல்லாம் உங்களுக்கும் நடக்கும்! தவறான முன் உதாரணத்தை சமூகத்தில் விதைக்காதீர்கள்.
வியன் பிரதீப்
செப்டம்பர் 20
www.viyanbooks.com
#vijayAntonyDaughter
Comments
Post a Comment