கரை ஒதுங்கும் விநாயகர் சிலைகள்? அச்சுறுத்தலாகும் சுற்றுச் சூழல்? எங்கே அவர்கள்?!

 முன் எப்போதும் இல்லாத அளவிற்கு விநாயகர் சிலைகள், ஊர்வலங்கள் அதிகரித்து இருக்கின்றன. பொதுமக்களைத் தாண்டிய சில அரசியல் இயக்கங்களின் தூண்டுதல்கள் அதிகரித்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு  சென்னையின் சில இடங்களில் உள்ள கடற்கரைகளில் கரைக்கப் பட்ட விநாயகர் சிலைகள் நேற்று கரை ஒதுங்கியது. அதோடு மட்டுமில்லாமல் கடல் நீரின் வண்ணங்களும் மாறி ரசாயனங்கள் கலந்திருந்தது.


நீதி மன்றங்கள் எவ்வளவோ சொல்லியும் ரசாயனங்கள் நிறைய பூசப் பட்டிருக்கும் விநாயகர் சிலைகளால் நிகழ்ந்த சோகங்கள் இது. பக்தியை யாரும் வேண்டாம் என சொல்லப் போவதில்லை. ஆனால் தெருவுக்கு ஒரு விநாயகர் கோவில் இருக்கும் நம் நாட்டில் இத்தனை விநாயகர் சிலைகள், அதை ஒட்டிய கரைப்புகள், அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுபாடுகள் தேவைதானா?


கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகளை அரசுதான் அப்புறப் படுத்திக் கொண்டிருக்கிறது. எந்த பக்தி இயக்கங்களோ அல்லது சுற்றுச் சூழல் இயக்கங்களோ இதற்காக குரல் எழுப்பவோ, உதவி செய்யவோ இல்லை.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீடிரென சிலரால் கிளப்பி விடப் படும் அசாதாரண சூழல்கள், அதற்குப் போடப்படும் பாதுகாப்புகள், மக்களின் உழைப்பு, அரசின் தொடர் உதவி மற்றும் கண்காணிப்பு எல்லாம் கடைசியில் இப்படி சுற்றுச் சூழல் மாசில் வந்து முடிந்தால் அது உண்மையான ஆன்மீகவாதிகளுக்கும் வருத்தமான நிகழ்வாகும்.


மக்கள் தான் இதனை சிந்தித்து கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த மண் சம்மந்தப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.


இந்த நிகழ்வில் எதற்கெடுத்தாலும் பொங்கும் திடீர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் காணாமல் போனதுதான் ஆச்சர்யமாக உள்ளது.





#Vinayagar #விநாயகர்சிலை #விநாயகர்சிலைகரைப்பு #விநாயகர்சிலைஊர்வலங்கள்

Visit www.viyanbooks.com for book details and purchases.

Comments

Popular posts from this blog

அறிஞர் அண்ணாவின் பொன் மொழிகள்

ஒருதலைக் காதலால் கத்திக்குத்து! - இதுதான் காதலா??

தமிழில் பெயர் வையுங்கள்