முன் எப்போதும் இல்லாத அளவிற்கு விநாயகர் சிலைகள், ஊர்வலங்கள் அதிகரித்து இருக்கின்றன. பொதுமக்களைத் தாண்டிய சில அரசியல் இயக்கங்களின் தூண்டுதல்கள் அதிகரித்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையின் சில இடங்களில் உள்ள கடற்கரைகளில் கரைக்கப் பட்ட விநாயகர் சிலைகள் நேற்று கரை ஒதுங்கியது. அதோடு மட்டுமில்லாமல் கடல் நீரின் வண்ணங்களும் மாறி ரசாயனங்கள் கலந்திருந்தது. நீதி மன்றங்கள் எவ்வளவோ சொல்லியும் ரசாயனங்கள் நிறைய பூசப் பட்டிருக்கும் விநாயகர் சிலைகளால் நிகழ்ந்த சோகங்கள் இது. பக்தியை யாரும் வேண்டாம் என சொல்லப் போவதில்லை. ஆனால் தெருவுக்கு ஒரு விநாயகர் கோவில் இருக்கும் நம் நாட்டில் இத்தனை விநாயகர் சிலைகள், அதை ஒட்டிய கரைப்புகள், அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுபாடுகள் தேவைதானா? கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகளை அரசுதான் அப்புறப் படுத்திக் கொண்டிருக்கிறது. எந்த பக்தி இயக்கங்களோ அல்லது சுற்றுச் சூழல் இயக்கங்களோ இதற்காக குரல் எழுப்பவோ, உதவி செய்யவோ இல்லை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீடிரென சிலரால் கிளப்பி விடப் படும் அசாதாரண சூழல்கள், ...
1. இயக்கத்தைப் பற்றி தினசரி வதந்திகளை உலவவிட்டு, வம்புக்கு இழுக்கிறார்களே? நமது இயக்கம் நன்றாகத் தழைத்திருப்பது கண்டு அருவருப்பு அடைபவர் பலர் உண்டல்லவா- அவர்கள், அவர்களின் பண்புக்குத் தக்கபடி பழிசுமத்துவதும், புகார் கிளப்புவதும், வதந்திகளை உலவ விடுவதும், வம்புக்கு இழுப்பதுமாகத்தான் இருப்பர், நாம் அவைகளைப்பற்றிக் கவலைப்படக் கூடாது; நாம் கவலைப்பட வேண்டும், கோபமடைய வேண்டும் என்பதற்காகத்தானே அவர்கள் அவ்விதமெல்லாம் பேசுவதும் எழுதுவதும்! அந்த வலையில் நாம் விழலாமா? நமக்கு நிரம்ப வேலை இருக்கிறதே தம்பி! நமது சக்திக்கு மீறிய காரியத்தை அல்லவா நாம் மேற் போட்டுக் கொண்டிருக்கிறோம். உன் நினைவு முழுவதும் அதிலே செல்லவேண்டும். ஆமாம், சில்லரைகளில் சிந்தனையைச் செலவிடக் கூடாது. 2.தினசரி மீடியாக்களில், செய்தித்தாள்களில் நம்முடைய நல்ல திட்டங்கள், செயல்கள் கூட இருட்டடிப்பு செய்யப் படுகிறதே? இங்குள்ள "பத்திரிகைகள்' நமது மூலாதாரக் கொள்கையை மறுப்பன. எனவே, அந்தக் கொள்கையை இருட்டடிப்பு மூலம் சாகடிக்கலாம் என்று எண்ணுகின்றனர். இதிலிருந்து நாம் தப்ப வேண்டுமானால், ஒவ்வொரு கிளைக் கழகமம் தனிப்பட்டவர் கள...
கடந்த வாரம் எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சோசியல் மீடியா நண்பர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தேன். அப்போது பெரும்பாலானோர் கேட்டது, என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்? #தமிழில்பெயர் / #தமிழ்ப்பெயர் வையுங்கள் என்றுதான். எனக்கு இதைக் கேட்டதும் கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி தான் வந்தது. காரணம், ஒரு காலத்தில் தமிழ்ப் பற்று மிகுதியாக இருந்த போது எல்லோரும் தாமாகவே முன் வந்து அவர்களின் பெயரை மாற்றியதோடு, அவர்களின் குழந்தைகளுக்கும் தூய தமிழிலேயே பெயர் வைத்தனர். அந்தக் காலம் மீண்டும் வர ஆரம்பித்து இருக்கிறது என்று நினைக்கிறேன். அதற்கு இப்போது நடக்கும் அரசியல் சூழலும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழில் பெயர் வைப்பதோடு மட்டுமில்லாமல், திருமண மற்றும் வாழ்வியல் முறையிலும் தமிழர் நடைமுறையைப் பின்பற்ற வேண்டுவது இந்த இனத்தை உயிர்ப்பித்திருக்கும். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்ட பிறகு, நாம் மற்ற மாநிலங்களில் வாழும் பிற தேசிய இனங்களின் திருமண முறையைப் பின்பற்றுகிறோமா? இல்லையே பிறகு எப்படி தமிழர் திருமண முறை என்று வேறு இனங்களின் திருமண முறையைப் பின்பற்ற வேண்டும்? தமிழர...
வாழ்த்துகள் தோழர்களே
ReplyDeleteThank you Thozhar
Delete