தமிழில் பெயர் வையுங்கள்

 கடந்த வாரம் எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சோசியல் மீடியா நண்பர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தேன். அப்போது பெரும்பாலானோர் கேட்டது, என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்? #தமிழில்பெயர் / #தமிழ்ப்பெயர் வையுங்கள் என்றுதான். எனக்கு இதைக் கேட்டதும் கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி தான் வந்தது. காரணம், ஒரு காலத்தில் தமிழ்ப் பற்று மிகுதியாக இருந்த போது எல்லோரும் தாமாகவே முன் வந்து அவர்களின் பெயரை மாற்றியதோடு, அவர்களின் குழந்தைகளுக்கும் தூய தமிழிலேயே பெயர் வைத்தனர். அந்தக் காலம் மீண்டும் வர ஆரம்பித்து இருக்கிறது என்று நினைக்கிறேன். அதற்கு இப்போது நடக்கும் அரசியல் சூழலும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.


தமிழில் பெயர் வைப்பதோடு மட்டுமில்லாமல், திருமண மற்றும் வாழ்வியல் முறையிலும் தமிழர் நடைமுறையைப் பின்பற்ற வேண்டுவது இந்த இனத்தை உயிர்ப்பித்திருக்கும். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்ட பிறகு, நாம் மற்ற மாநிலங்களில் வாழும் பிற தேசிய இனங்களின் திருமண முறையைப் பின்பற்றுகிறோமா? இல்லையே பிறகு எப்படி தமிழர் திருமண முறை என்று வேறு இனங்களின் திருமண முறையைப் பின்பற்ற வேண்டும்? தமிழர் திருமண முறையைத் தெரிந்து கொண்டு பின்பற்ற நாம் எல்லோரும் முயற்சிக்க வேண்டும்.


அதே போல தமிழில் பெயர் வைப்பதானாலும், தமிழர் முறைப்படி திருமணம் செய்வித்தலானாலும் சரி அது சாதிய நடைமுறையோடு போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. தமிழர்களின் அறம் எப்படி எல்லோருக்கும் பொதுவானதோ அது போலவே தமிழர் திருமண முறையும் அனைவருக்கும் பொதுவானது. அங்கே ஏற்றத் தாழ்வு என்பதில்லை.


தமிழ் அறிஞர்களும், மக்களும் நல்ல தமிழ்ப் பெயர்களை தொகுக்க வேண்டும். அப்போதுதான் நிறைய தமிழ்ப் பெயர்கள் வருங்கால சந்ததிக்கு கிடைத்தவண்ணம் இருக்கும் 


வியன் பிரதீப் 

செப்டம்பர் 17


#tamilnames #babynames #girlbabyname #boyname #reader #tamil #storyteller #blogpost #bookreader #bookreadersclub #tamilstory #Names

Visit www.viyanbooks.com for book details/purchases.

Comments

Popular posts from this blog

அறிஞர் அண்ணாவின் பொன் மொழிகள்

ஒருதலைக் காதலால் கத்திக்குத்து! - இதுதான் காதலா??