கடந்து போன பயணங்கள் - சி.ரா .சங்கர்

என் மரியாதைக்குரிய அண்ணன்,எழுத்தாளர் டான் அசோக் அவர்கள் பயணக் கட்டுரை என்பது "முன் முடிவுகளால் நிறைந்திருக்கக் கூடாது. தமக்கு அறிமுகம் ஆனவர்களை நமக்கு அறிமுகம் செய்ய வேண்டுமென சொல்லி இருப்பார்". இளம் எழுத்தாளர் சி.ஆர்.சங்கரின் கடந்து போன பயணங்கள் என்ற பயணக் கட்டுரை அப்படிதான் எனக்கு இருந்தது. அவரின் "கடந்து போன பயணங்கள்" நான் இப்போது பயணித்தது போலிருந்தது. அதிலேயே அவர் வெற்றி பெற்றுவிட்டார்.

மேலும் நடந்தது பற்றி,உள்ளதை உள்ளபடி சொல்வது ஒரு கலை அதோடு சேர்த்து அந்த நிகழ்வுகளின் போது நம் எண்ணங்களில் ஏற்பட்ட பயணங்களை அப்படியே பிரதிபலிப்பதற்கு ஒருவித துணிவு வேண்டும். அந்தத் துணிவிற்கு பாராட்டுக்கள்.

பயணக் கட்டுரை என்றாலும், நா.முத்துக்குமார் ரசிகன் என்பதால் எதார்த்தமும்,கவிதையும் எழுத்துக்களில் வந்து விழுந்திருக்கிறது.நிறைய இடங்களில் புன்முறுவல் பூக்கச் செய்கிறது, உணர்வுகளை கடத்துகிறது.

எவ்வளவு பிடித்த பயணம் என்றாலும் அது முடியும் பொழுது ஒரு வித  களைப்பு வந்துவிடும்.ஆனால் இவரின் கடந்து போன பயணம் களைப்பை ஏற்படுத்தாமல் நம்முடைய பயணத்தை நினைவூட்டுகிறது...

தொடர்ந்து பல படைப்புகள் எழுத எழுத்தாளர் @c.r.sankar க்கு வாழ்த்துக்கள்!

இது போன்ற நல்ல படைப்புகளை தொடர்ந்து வெளியிடும் @aelaypublish க்கும் என் வாழ்த்துக்கள்!




Visit www.viyanbooks.com for book details/purchases.

Comments

Popular posts from this blog

அறிஞர் அண்ணாவின் பொன் மொழிகள்

ஒருதலைக் காதலால் கத்திக்குத்து! - இதுதான் காதலா??

தமிழில் பெயர் வையுங்கள்