நீட் என்னும் சமூக அநீதி - இனி பூஜ்ஜியம் மார்க் எடுத்தாலே மருத்துவம் படிக்கலாம்
நீட் என்னும் சமூக அநீதி
சில வருடங்களுக்கு முன்பு நம் எல்லோருக்கும் நீட் தேர்வு திறமையானவர்களைத் தேர்ந்தெடுக்கவே கொண்டுவரப் படுகிறது என்று பிரச்சாரம் செய்து வலுக்கட்டாயமாக நம்ப வைக்கப் பட்டது. அதற்காக தென் இந்தியாவில் பல கிடுக்குப் பிடிகள் போடப் பட்டது. உதாரணமாக, தமிழ் நாட்டில் தேர்வு எழுத வேண்டியவர்களை பிற மாநிலங்களுக்கு எக்ஸாம் சென்டர் ஒதுக்குவது, பெண்களின் தாலியை கழட்டிக் கொடுத்துவிட்டுச் சென்று எழுதச் சொல்வது போன்று ஏராளமான கிடுக்குப் பிடிகள். அதே ஆண்டுகளில் ஒரே கோச்சிங் சென்டரைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் மருத்துவ சீட் பெறுவதும், முக்கியமான பாடத்தில் பெயில் ஆனவர்கள், குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் சீட் பெறுவதும், வினாத்தாள்கள் ரிலீஸ் ஆவதும் நடந்து கொண்டிருந்து. இந்தக் கொடுமைகளால் தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இளம் மாணவர்கள், பெற்றோர்கள் தற்கொலை செய்த வண்ணம் இருந்தனர். ஆனாலும் ஓபிசி பிரிவினர் உள்ளே நுழையக் கூடாது, கிராமப் புற ஏழை எளியவர்கள் மருத்துவர் ஆகிவிடக் கூடாதென ஒரு நரிக் கூட்டம் தொடர்ந்து தனது சதி வலைகளைப் பின்னிக் கொண்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக நேற்று ஒன்றிய அரசு, நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெர்சன்டைல் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க சூழ்ச்சியாகும். தகுதி என்று சொல்லிவிட்டு மதிப்பெண் இல்லாமல் வெறும் தேர்வை எழுதினாலே முதுநிலை படிக்கலாம் என்றால் பிறகு தேர்வு எதற்கு? அதனை ஏன் நடத்த வேண்டும். பெரும்பான்மை மக்களுக்கு இல்லாத ஒன்று ஒரு சிலருக்காக நடத்தப் படுவது எதனால்? இது முழுக்க முழுக்க தனியார் பயிற்சி மையங்கள், தனியார் கல்லூரிகள் கல்லா கட்டவும், வளர்ச்சி பெறவும். குறிப்பிட்ட ஒரு சாதிக்கு மட்டுமே நடத்தப் படும் தேர்வாகமும் ஓபிசி மாணவர்கள், பொதுமக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் அந்த சாதியைச் சார்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், சாதி சங்கத் தலைவர்கள் இதனை புரிந்து கொள்வது எப்போது? புரிந்து கொண்டால் இந்த சதிச் செயலுக்கு துணை போகாமல் எதிர்ப்பார்களா? இல்லையெனில் ஆபத்து அவர்களுக்கும் சேர்த்துதான்...
வியன் பிரதீப்
செப்டம்பர் 21/2023
Visit www.viyanbooks.com for book details/purchases.
#DailyNews #NEET #NEETDead #NEETMurder #BANNEET #BJPNEET
Comments
Post a Comment