அந்த மரத்தின் பின்னால் - ஷியாம் மரூன்
✅கோவை புத்தகக் கண்காட்சி 2023 இல் நண்பர் கவிஞன் மொழியிடம் புது எழுத்தாளர்களின் புத்தகம் கொடுங்கள் என்று கேட்டு வாங்கியதில் கிடைத்தது எழுத்தாளர் ஷியாம் மரூன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு.
✅சிறு துளி சேர்ந்து கடலாவது போல...ஒரு பக்கக் கதை போல சிறு சிறு கதைகள் சுமார் 50 சேர்ந்த தொகுப்பு. எல்லா உணர்வுகளையும் கடத்திச் செல்வதில் எழுத்தாளர் வெற்றி பெற்று இருக்கிறார், நிறைய இடங்களில் அட செம என்றும் சில இடங்களில் புன்முறுவல் செய்ய வைக்கிறது.
❇️Feel good கதைகள் நிறைய இருக்கிறது, தாராளமாக இதனைப் படிக்கலாம்.
பதிப்பாளர் & எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.
❇️புத்தக விமர்சனம்❇️
புத்தகம்: அந்த மரத்தின் பின்னால்
எழுத்தாளர்: ஷியாம் மரூன்
வெளியீடு: ஏலே பதிப்பகம்
வகை: சிறுகதை
பக்கம்:112
விலை:160₹
Visit www.viyanbooks.com for book details/purchases.
Comments
Post a Comment