என்ன சொல்கிறார் அறிஞர் அண்ணா? கேள்வியும் - பதிலும்
1. இயக்கத்தைப் பற்றி தினசரி வதந்திகளை உலவவிட்டு, வம்புக்கு இழுக்கிறார்களே? நமது இயக்கம் நன்றாகத் தழைத்திருப்பது கண்டு அருவருப்பு அடைபவர் பலர் உண்டல்லவா- அவர்கள், அவர்களின் பண்புக்குத் தக்கபடி பழிசுமத்துவதும், புகார் கிளப்புவதும், வதந்திகளை உலவ விடுவதும், வம்புக்கு இழுப்பதுமாகத்தான் இருப்பர், நாம் அவைகளைப்பற்றிக் கவலைப்படக் கூடாது; நாம் கவலைப்பட வேண்டும், கோபமடைய வேண்டும் என்பதற்காகத்தானே அவர்கள் அவ்விதமெல்லாம் பேசுவதும் எழுதுவதும்! அந்த வலையில் நாம் விழலாமா? நமக்கு நிரம்ப வேலை இருக்கிறதே தம்பி! நமது சக்திக்கு மீறிய காரியத்தை அல்லவா நாம் மேற் போட்டுக் கொண்டிருக்கிறோம். உன் நினைவு முழுவதும் அதிலே செல்லவேண்டும். ஆமாம், சில்லரைகளில் சிந்தனையைச் செலவிடக் கூடாது. 2.தினசரி மீடியாக்களில், செய்தித்தாள்களில் நம்முடைய நல்ல திட்டங்கள், செயல்கள் கூட இருட்டடிப்பு செய்யப் படுகிறதே? இங்குள்ள "பத்திரிகைகள்' நமது மூலாதாரக் கொள்கையை மறுப்பன. எனவே, அந்தக் கொள்கையை இருட்டடிப்பு மூலம் சாகடிக்கலாம் என்று எண்ணுகின்றனர். இதிலிருந்து நாம் தப்ப வேண்டுமானால், ஒவ்வொரு கிளைக் கழகமம் தனிப்பட்டவர் கள...