தாரன் - கவிஞன் மொழி

காதலில் மூழ்கித் திளைத்தவன் எங்கே இருப்பான்?

ஒன்னா காதலியுடன் ட்ராவல்ல இருப்பான் இல்லாவிட்டால் இப்படி கவிதையில் மூழ்கிப் போவான்.

கவிஞன் மொழி அவர்களின் "தாரன்" என்ற கவிதைத் தொகுப்பு படித்தேன். என்னம்மா உருகி இருக்கார்யா இந்த மனுஷன், இவருக்குள்ளும் எதோ இருக்கு பாரேன் என்பது போலத்தான் தோன்றியது படித்து முடித்ததும்.

மனுஷன் கவிதை என்ற பெயரில் குடும்பமே நடத்தி இருக்கிறார், ரேஷன் கார்டு மட்டும் தான் வாங்கவில்லை அல்லது அது பற்றி இந்தக் கவிதையில் இல்லை. மற்றபடி காதலனாக இல்லாமல் கணவனாகவே வாழ்ந்து இருக்கிறார் கவிதையில்.

ஒரு கட்டத்தில் எனக்கு , பாஸ் இது உங்க கவிதைத் தொகுப்பா இல்லை காதல் டைரியா என்று கேட்கத் தோன்றியது. பல இடங்களில் பாஸ் நீங்க மைண்ட் வாய்ஸ் என்று சத்தமா பேசிட்டீங்க என்பது போல இருந்தது.

காதல் கடிதம் தீட்ட மேகம் எல்லாம் காகிதம் என்பார்கள் , இவர் காதல் கவிதை தீட்ட பக்கத்து யுனிவெர்ஸ் மேகத்தை அடிஷனல் சீட்டாக எடுத்துக்குவார் போல.

தரன் - ஒரு முழு பக்க காதல் இல்லை முழுக்க முழுக்க காதல் பற்றியது. அட்டைப் படமே அதற்கு சாட்சி!

மாதவிடாய் பற்றி எழுதியிருந்தது சிறப்பு , ஆண் என்பது அதிகாரத்தில் இல்லை , பெண் என்பது உள்ளத்தோடு இருக்கிறது  போன்ற பல வரிகள் நைஸ்!

சமீபத்தில் தான் கவிஞரை சந்தித்தேன் என்பதால் "ஹே எப்புட்றா?" என்ற ஆச்சர்யத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை!!

வாழ்த்துக்கள் கவிஞரே!




Visit www.viyanbooks.com for book details/purchases.

Comments

Popular posts from this blog

அறிஞர் அண்ணாவின் பொன் மொழிகள்

ஒருதலைக் காதலால் கத்திக்குத்து! - இதுதான் காதலா??

தமிழில் பெயர் வையுங்கள்