ஒரு Coffee யும், ஒரு Caffiene ம் - பிரசாந்த் ஆல்டோ

என் கைகளில் காஃபி கோப்பையோ,தேநீர் கோப்பையோ இல்லை ஆனாலும் கவிஞர் பிரசாந்த் ஆல்ட்டோ எழுதிய "ஒரு Coffee யும், ஒரு Caffiene ம்" என்ற கவிதைப் புத்தகம் இருந்தது. முதல் சில பக்கங்களிலேயே தொடர்ந்து படிக்க வேண்டுமென்ற ஆவலை ஏற்படுத்தி விட்டார். கவிதைகளும் அதற்கு அவர் சொல்லும் உதாரணங்களும் மிக அருமை. ஒவ்வொரு கவிதையும் ஒரு கதை சொல்கிறது, அந்தக் கதைக்குள்ளும் கவிதையிருக்கிறது. காதலி தன் அப்பா மீது வைத்திருக்கும் அன்பைப் போல காதலனும் அன்பை எதிர்பார்க்கும் ஒரு கவிதை படித்தேன், அடடே! இதுவரை இந்த மாதிரி கோணத்தில் எந்தக் கவிஞரும் இப்படி எழுதவில்லையே என்று பாராட்டும்படி இருக்கிறது. Emergency அன்பு என்று தலைப்பிட்டு வந்துள்ள அந்தக் கவிதை ஒன்றே போதும், ஒரு முறை சுவைத்துப் பார்த்தாலே முழுவதையும் குடிக்காமல் கிழே வைக்காத காஃபியைப் போலத் தான் இவரின் இந்தக் கவிதைப் புத்தகமும் இருந்தது. அவசியம் பருகுங்கள், கடைத் தெருவில் எங்கோ அலைந்து கொண்டிருக்கும் நமக்கு அங்கே அருகிலிருந்து ஒரு கடையில் காஃபியின் மணம் வீசுமல்லவா?அது போல உங்கள் நினைவுகளையும் இந்தப் புத்தகம் கவர்ந்திழுத்து விடும். வாத்துக்கள் கவிஞரே! ...